வானவில் : அமேசான் எக்கோ பிளெக்ஸ்

அமேசான் ‘எகோ பிளெக்ஸ்’ எனும் நவீன சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2019-11-27 06:52 GMT
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் பல தொழில்நுட்ப கருவிகளையும் தயாரித்து விற்பனை செய்கிறது. அந்த வகையில் புதிதாக ‘எகோ பிளெக்ஸ்’ எனும் நவீன சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.2,999 ஆகும். இது பிளக்கில் சொருகி பயன்படுத்தக் கூடிய ஸ்மார்ட் ஸ்பீக்கராகும். இதை சாதாரணமாக வீட்டில் உள்ள பிளக் பாயிண்டில் சொருகி பயன்படுத்தலாம்.

இதில் யு.எஸ்.பி. போர்ட் உள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் மற்றும் பிற மின்னணு கருவிகளை சார்ஜ் செய்யலாம். இது ஸ்மார்ட் இரவு விளக்காகவும் பயன்படுத்த முடியும்.

மேலும் இதை ஸ்பீக்கராகவும் பயன்படுத்த முடியும். குரல் வழி கட்டுப்பாடு மூலம் செயல்படுத்தக் கூடிய கருவிகளையும் இதன் மூலம் செயல்படுத்தலாம்.

மேலும் செய்திகள்