சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் அரசியல் சட்டதின உறுதிமொழி ஏற்பு
சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் அரசியல் சட்டதின உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
புதுச்சேரி,
அரசியல் சட்ட தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி சட்டசபை வளாகத்தில் அம்பேத்கரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
படத்துக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அரசியல் சட்ட தின உறுதிமொழியை சபாநாயகர் வாசிக்க அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்று சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கமலக்கண்ணன், துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், சிவா, ஜெயமூர்த்தி, டி.பி.ஆர்.செல்வம், என்.எஸ்.ஜே.ஜெயபால், பாஸ்கர், விஜயவேணி, ஜான்குமார், வெங்கடேசன், சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் சட்டதின விழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கி பேசினார். நிகழ்ச்சியில் கவர்னரின் சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ், கூடுதல் செயலாளர் சுந்தரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் புதுவை பல்கலைக்கழகம், வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி, இதயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புதுச்சேரி அரசு கூட்டுறவு கல்வியியல் கல்லூரி மற்றும் சமுதாய கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு கவர்னர் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
தலைமை செயலகத்தில் உள்ள சட்டத்துறை செயலாளர் அலுவலகத்தில் அரசியல் சட்ட தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சட்டத்துறை செயலாளர் ஜூலியட் புஷ்பா, சார்பு செயலாளர் முருகவேல், சட்ட அதிகாரிகள், முதன்மை மொழிபெயர்ப்பாளர் சுந்தரமுருகன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். முன்னதாக தேசத்தலைவர்களின் உருவ படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேபோல் புதுவையில் உள்ள அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் அரசியல் சட்ட தினம் கொண்டாடப்பட்டு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
புதுவை பல்கலைக்கழகத்தில் அரசியல் சட்ட தினம் கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக பதிவாளர் சித்ரா வரவேற்று பேசினார். இயக்குனர் பாலகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார். சென்னை பல்கலைக்கழக சட்ட ஆய்வுகள் துறை தலைவர் டேவிட் அம்புரோஸ் இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு ஒழுக்க நெறி குறித்து தனது உரையை நிகழ்த்தினார்.
எம்.ஜி. பல்கலைக்கழக இந்திய சட்ட சிந்தனை பள்ளியின் பேராசிரியர் பிஸ்மி கோபாலகிருஷ்ணன், நமது அன்றாட வாழ்க்கையில் இந்திய அரசியலமைப்பின் பங்கு குறித்து சிறப்புரையாற்றினார். முடிவில் புதுவை பல்கலைக்கழக சட்டப்பள்ளி பேராசிரியர் மோகனன் பாஸ்கரன் நன்றி கூறினார்.
ஜிப்மரில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ராகேஷ் அகர்வால் தலைமையில் அரசியல் சட்ட தின உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
அதேபோல் புதுச்சேரி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் கொண்டாடப்பட்ட அரசியல் சட்ட தின நிகழ்ச்சியில் அரசியல் அமைப்பு சாசனம் உருவான விதம் குறித்த வீடியோ தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. மேலும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அரசியல் சட்ட தினத்தையொட்டிபுதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பினர் நிறுவனர் சாமிநாதன் தலைமையில் சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் மாணவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் விக்கி, பிறைசூடன், தமிழ்செல்வன், மணி, வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.