ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அரசியல் அமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அரசியல் அமைப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Update: 2019-11-26 23:00 GMT
ஈரோடு,

ஆண்டு தோறும் நவம்பர் 26-ந் தேதி இந்திய அரசியல் அமைப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அரசியல் அமைப்பு நாள் உறுதிமொழி நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன் கார்த்திக்குமார் உறுதிமொழியை வாசிக்க அவரைத்தொடர்ந்து போலீசாரும், அமைச்சு பணியாளர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் ஈரோடு சிறுதொழில்கள் சங்க கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய அரசியல் அமைப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா தலைமை தாங்கி, உறுதிமொழியை வாசித்தார். அவர் உறுதிமொழி வாசிக்க அனைவரும் திரும்பக்கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அரவிந்தன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ப.ரங்கசாமி, தாட்கோ மாவட்ட மேலாளர் வாசுகி, குறு,சிறு-நடுத்தர தொழில்கள் உதவி இயக்குனர் விஜயகுமார், சிட்கோ கிளை மேலாளர் ஷர்மிளாதேவி, மாவட்ட தொழில் மைய உதவிப்பொறியாளர் ஆஷாதேவி மற்றும் தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியை கே.சுமதி தலைமையில் ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் அரசியல் அமைப்பு நாள் உறுதிமொழி ஏற்றனர்.

மேலும் செய்திகள்