சட்டசபை காங்கிரஸ் தலைவராக பாலசாகேப் தோரட் தேர்வு
சட்டசபை காங்கிரஸ் தலைவராக பாலசாகேப் தோரட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் பாரதீய ஜனதா அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்த நிலையில், திடீர் திருப்பமாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்-மந்திரி அஜித்பவார் ஆகியோர் பதவி விலகியதை அடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க ஆயத்தமாகின. இந்த கூட்டணியில் காங்கிரசின் சட்டசபை தலைவர் தேர்வு செய்யப்படாமல் இருந்தார்.
இந்தநிலையில், அக்கட்சியின் மாநில தலைவர் பாலசாகேப் தோரட் சட்டசபை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதை மும்பையில் நட்சத்திர ஓட்டலில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.