சுற்றுச்சூழல் மாசு அடைவதை குறைக்க: ஜப்பானிய முறையில் மரம் வளர்க்க திட்டம் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை
சென்னையில் சுற்றுச்சூழல் மாசு அடைவதை குறைக்க ‘மியாவாக்கி’ எனப்படும் ஜப்பானிய முறையில் மரம் வளர்க்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் காலியாக உள்ள இடங்கள், நீர்நிலை ஓரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் விதிமுறைகளுக்கு உட்பட்டு, நகர்புற காடுகள் முறையில்(மியாவாக்கி), அடர்த்தியான மரங்கள் அடங்கிய பசுமை நிலபரப்பை உருவாக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார்.
அதன்படி, கோட்டூர்புரம் பறக்கும் ரெயில் நிலையம் அருகில் சுமார் ½ ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் நிலத்தில் நகர்புற காடுகள் முறையில் அடர்த்தியான மரங்கள் அடங்கிய பசுமை நிலபரப்பு உருவாக்கப்படவுள்ளது.
நகர்புற காடுகள் முறையானது ஜப்பானிய தாவரவியல் நிபுணர் ‘அகிரா மியாவாக்கி’ என்பவரால் கண்டறியப்பட்ட ஒரு சிறந்த தாவரவியல் தொழில்நுட்ப முறையாகும். இந்த முறையை பயன்படுத்தி ஒரே இடத்தில் அடர்த்தியான, மண்ணின் தன்மைக்கு ஏற்ப 30 டஜன் நாட்டுப்புற வகை மரங்களை வளர்க்கலாம்.
இம்முறையில் வளர்க்கப்படும் மரங்கள் சாதாரண மரங்களை விட 10 மடங்கு அதிக வளர்ச்சியும், 30 மடங்கு அதிக அடர்த்தியும் கொண்டதாக இருக்கும். இந்த முறையில் வளர்க்கப்படும் மரங்களுக்கு முதல் 3 வருடங்களுக்கு பிறகு எந்தவொரு பராமரிப்பு பணிகளும் தேவைப்படாது.
இவ்வாறாக உருவாக்கப்படும் நகர்புற காடுகளினால் நகர்புற மக்களுக்கு சுற்றுப்புறச்சூழல் மாசு குறைக்கப்பட்டு காற்றின் தூய்மை மேம்படுத்தும் சூழ்நிலை உருவாகும். நகரங்களில் அழிந்துவரும் அரிய வகை பறவை இனங்கள் பெருகக்கூடிய நிலையும் உருவாகும்.
இந்த பசுமை முயற்சியில் ½ ஏக்கர் நிலத்தில் நம் நாட்டின் பாரம்பரிய மரங்களான புங்கை, பூவரசம், வேப்ப மரம் மற்றும் சில அரிய வகை மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டு நல்ல மண் நிரப்பி பின்னர் அவற்றில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரம் மற்றும் ஆற்று மணல் கலக்கப்பட்டு மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிக்காக தேவைப்படும் உரங்கள், தெற்கு மண்டலத்துக்குட்பட்ட பல்வேறு உரம் தயாரிக்கும் நிலையங்களிலிருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ‘மியாவாக்கி’ பசுமை காடுகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டு, பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சியின் பிற பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும்.
மேற்கண்ட தகவல்கள் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.