தேவேந்திர பட்னாவிஸ் - அஜித்பவார் சந்திப்பு; பேசியது என்ன?

மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது என முடிவு செய்யப்பட்ட நிலையில், அஜித்பவார் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி அமைத்தது.

Update: 2019-11-25 23:32 GMT
மும்பை, 

கடந்த சனிக்கிழமை காலை தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றுக்கொண்டனர். பதவி ஏற்ற பிறகு நேற்று முன்தினம் இரவு தேவேந்திர பட்னாவிசும், அஜித்பவாரும் அதிகாரப்பூர்வமாக சந்தித்து பேசினர்.

அப்போது, 2 பேரும் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிவாரணம் குறித்து பேசியதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இந்தநிலையில், அஜித் பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றபோது, சில தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒருபகுதியினர் அவருடன் இருந்து உள்ளனர். ஆனால் தற்போது அவர்களில் பெரும்பாலானோர் சரத்பவாரிடம் சென்றுவிட்டனர்.

இந்த விவகாரம் குறித்து தான் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்-மந்திரி அஜித்பவாரும் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்