‘என்னை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள்’ அழகிபட்டம் வென்ற கோவை பெண் போலீசில் புகார்
தன்னை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் சிலர் வெளியிடுவதாக அழகிபட்டம் வென்ற கோவை பெண் போலீசில் புகார் மனு அளித்து உள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-;
கோவை,
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் சோனாலி பிரதீப். இவர் திருமணமானவர்களுக்கான அழகி போட்டியில் கலந்து கொண்டு ‘மிஸ் இந்தியா யுனிவர்ஸ்’ பட்டத்தை வென்றவர். தற்போது அ.தி.மு.க.வில் உறுப்பினராக சேர்ந்துள்ளார். இந்த நிலையில் சோனாலி பிரதீப் கோவை சாய்பாபா காலனி போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அழகி பட்டம் வென்ற நான் தற்போது அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியராக வகுப்புகள் எடுத்து வருகிறேன். சமூக சேவைப் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன்.
அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருந்து கொண்டு தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு அளித்து இருந்தேன். நான் சமூக வலைதளங்களை பார்த்துக்கொண்டு இருந்த போது சிலர், என்னை ஆபாசமாக சித்தரித்து, தகாத வார்த்தைகளை பதிவிட்டு இருந்தனர்.இதனை கண்டுமன உளைச்சலும், அவமானமும் அடைந்தேன்.
குடும்பத்தினர் மத்தியில் அவப்பெயரை உண்டாக்கியஅந்த பதிவுகளை சமூகவலைதளங்களில் இருந்து நீக்குவதுடன் மேற்கண்டபதிவுகளை சமூகவலைதளங்களில்பதிவேற்றம்செய்த நபர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம்குறித்து கோவைசாய்பாபா காலனிபோலீசார்வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.