ஆதரவற்றோரை தேடிப்பிடித்து புத்தாடை அணிவித்த தன்னார்வலர்கள்

புதுவையில் ஆதரவற்றோரை தேடிப் பிடித்து முடிவெட்டிய தன்னார்வலர்கள் அவர்களுக்கு புத்தாடை அணிவித்து மகிழ்ந்தனர்.

Update: 2019-11-25 00:34 GMT
புதுச்சேரி,

நாடு முழுவதும் முதியவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பலர் உறவினர்களால் கைவிடப்பட்டு ஆதரவற்றவர்களாக சுற்றி திரிகின்றனர். அவர்கள் பிச்சை எடுத்து, கிடைப்பதை உண்டு ரோட்டில் படுத்து உறங்கி வருகின்றனர்.

மேலும் அவர்கள் நாள்தோறும் குளிப்பதில்லை, துணிமணிகளை துவைத்து அணிவதில்லை. மாதக்கணக்கில் முடிவெட்டாததால் நீண்ட முடியுடன் திரிந்து வருகின்றனர்.

அத்தகையவர்களை பிடித்து முடிவெட்டியும், மொட்டை அடித்தும் குளிக்க வைத்து, புத்தாடை அணிவிக்கும் பணியினை பசியில்லா தமிழகம் என்ற அறக்கட்டளையை சேர்ந்த தன்னார்வலர்கள் தமிழகம், புதுச்சேரியில் 100 நாட்கள் கருணை பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 6-ந்தேதி நாகர்கோவிலில் தங்கள் பயணத்தை தொடங்கினர். திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திருச்சி என பல ஊர்களை கடந்த அவர்கள் தற்போது புதுச்சேரி வந்துள்ளனர்.

புதுவை பாரதி பூங்கா அருகே சுற்றித் திரிந்த ஆதரவற்றோர்களை பிடித்து அவர் களுக்கு முடிவெட்டி குளிப்பாட்டி புத்தாடை அணிய கொடுத்தனர். வருகிற 30-ந் தேதி வரை அவர்கள் புதுவையில் தங்கி யிருந்து இந்த பணியை செய்ய உள்ளனர்.

இந்த பணிகளை சபாநாயகர் சிவக்கொழுந்து தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்