15 தொகுதிகளையும் மாதிரி தொகுதிகளாக மாற்றுவேன் பிரசாரத்தில் எடியூரப்பா பேச்சு
இடைத்தேர்தல் நடை பெறும் 15 தொகுதி களையும் மாதிரி தொகுதி களாக மாற்றுவேன் என்று எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு வருகிற 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி முதல்-மந்திரி எடியூரப்பா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் நேற்று இரேகெரூர் தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இடைத்தேர்தலில் 15 தொகுதிகளிலும் வெற்றி பெற பா.ஜனதா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. 15 தொகுதியிலும் வெற்றி பெற்று புதிய சாதனை படைப்போம். வெற்றியின் வித்தியாசத்திற்கு தான் தற்போது போட்டியே நடக்கிறது. அனைத்து தரப்பு மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவோம். நான் மீண்டும் ஒரு முறை பிரசாரம் செய்ய வருவேன்.
நான் முதல்-மந்திரி பதவியில் நீடிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களின் விருப்பமாக உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் யார் என்பது டிசம்பர் 9-ந் தேதி தெரியவரும். பா.ஜனதா வெற்றி பெற்றால் 15 தொகுதிகளையும் வளர்ச்சியில் மாதிரி தொகுதிகளாக மாற்றுவேன். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.