பாவம் செய்த எடியூரப்பா அரசு தொடர்ந்து நீடிக்க வேண்டுமா? தேர்தல் பிரசாரத்தில் குமாரசாமி கேள்வி
பாவம் செய்த எடியூரப்பா அரசு தொடர்ந்து நீடிக்க வேண்டுமா? என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு யஷ்வந்தபுரம் தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் ஜவராயிகவுடா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று அந்த தொகுதியில் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:-
நான் எப்போதும் சாதி பெயரில் அரசியல் செய்தது இல்லை. முதல்-மந்திரி எடியூரப்பாவை ஏழை மக்கள் சந்திக்க முடிவதில்லை. இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளரான தகுதி நீக்க எம்.எல்.ஏ., நான் முதல்-மந்திரியாக இருந்தபோது தொகுதி வளர்ச்சிக்கு நிதியே வழங்கவில்லை என்று பொய் சொல்லிக்கொண்டு திரிகிறார். இதுகுறித்து பகிரங்க விவாதத்திற்கு நான் தயாராக இருக்கிறேன். அவர் தயாரா?.
பா.ஜனதா, ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக 17 எம்.எல்.ஏ.க்களுக்கு பண ஆசை காட்டி தங்கள் பக்கம் இழுத்தது. முதல்-மந்திரி எடியூரப்பா பிரசாரத்தை தொடங்கியுள்ளார். வளர்ச்சி பற்றி மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் எடியூரப்பாவோ, தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்காக உயிரை கொடுப்பேன் என்று சொல்கிறார். அவர் இந்த மாநில மக்களின் நலனுக்காக உயிரை கொடுக்க வேண்டுமே தவிர, தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்காக அல்ல. இத்தகைய முதல்-மந்திரி உங்களுக்கு வேண்டுமா?.
பாவம் செய்த எடியூரப்பா அரசு தொடர்ந்து நீடிக்க வேண்டுமா? அல்லது தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு தண்டனை கொடுத்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். டிசம்பர் 9-ந் தேதிக்கு பிறகு நடைபெறும் புதிய அரசியல் மாற்றத்திற்கு உதவ வேண்டும்.
அதானியில் ஒரு போலீஸ் அதிகாரி, காங்கிரஸ் நிர்வாகி ஒருவருக்கு தொந்தரவு கொடுப்பதாக தகவல் வந்துள்ளது. அவர் தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நன்றாக இருக்காது என்று எச்சரிக்கிறேன். ஒசக்கோட்டையில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ள சரத் பச்சேகவுடா வெற்றி பெறுவார். அவருக்கு எங்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது. தேவைப்பட்டால் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்.
பா.ஜனதாவினர் சில மடாதிபதிகளை பயன்படுத்தி கொண்டு, எங்கள் வேட்பாளர்கள் சிலரின் மனுவை வாபஸ் பெற வைத்தனர். 12 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். அவர்களின் வெற்றிக்காக நான் பாடுபட்டு வருகிறேன். இவ்வாறு குமாரசாமி பேசினார்.