மணப்பாறையில், கடிதம் மூலம் மனைவிக்கு தலாக் கூறிய கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
மணப்பாறையில், கடிதம் மூலம் மனைவிக்கு தலாக் கூறிய கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டம், மணப்பாறை மஸ்தான் தெரு பகுதியை சேர்ந்தவர் அசாருதீன்(வயது 31). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், புத்தாநத்தம் மேற்குத்தெருவை சேர்ந்த சிரின் அலிமா(22) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு 25 பவுன் நகை மற்றும் பணம், சீர்வரிசைப் பொருட்கள் ஆகியவை பெண்ணின் தரப்பில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் புதுமண தம்பதி, சிரின் அலிமா வீட்டிற்கு விருந்திற்கு சென்றபோதும், ரம்ஜானுக்கு பின்னரும் அசாருதீன் குடும்பத்தினர் சிரின் அலிமாவிடம் பணம் கேட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் திருமணம் முடிந்து ஒரு மாதத்திலேயே அசாருதீன், பெங்களூருவுக்கு வேலைக்கு சென்று விட்டார்.
4 பேர் மீது வழக்கு
இந்நிலையில் கடந்த மாதம் 21-ந் தேதி அசாருதீன் கடிதம் மூலம், சிரின் அலிமாவிற்கு தலாக் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிரின் அலிமா குடும்பத்தினர், இது தொடர்பாக அசாருதீன் குடும்பத்தினரிடம் பேசியும் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இது குறித்து சிரின் அலிமா மணப்பாறை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததோடு, கடிதம் மூலம் தலாக் கூறிய அசாருதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்பேரில் அசாருதீன் மற்றும் அவரது தந்தை இஸ்மாயில், தாய் பைரோஸ், சகோதரி ஜாஸ்மின் ஆகிய 4 பேர் மீதும் முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மணப்பாறை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முத்தலாக் தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர், திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக இந்த வழக்கு மணப்பாறை மகளிர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.