அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது
சென்னையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
சென்னை,
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
மேடையில் வைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
இதற்கு முந்தைய அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. கஜா புயல் காரணமாக கடந்த ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இன்று பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி விதிகளில் மாற்றம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.