ஸ்ரீபெரும்புதூர் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி நண்பர் படுகாயம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். நண்பர் படுகாயம் அடைந்தார்.
ஸ்ரீபெரும்புதூர்,
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் கொள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் சைதன்யா (வயது 29). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாத்தூர் பகுதியில் தனியார் குடியிருப்பில் நண்பர்களுடன் தங்கி வல்லம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சைதன்யாவுடன் கிஷ்ணகிரியை சேர்ந்த அவரது நண்பர் பிரசாத் (20) என்பவரும் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு பிரசாத், சைதன்யா இருவரும் மோட்டார் சைக்கிளில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்றனர். ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூர் பகுதியில் செல்லும்போது நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
சாவு
இதில் சைதன்யா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பிரசாத் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சைதன்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.