2 அம்மன் கோவில்களில் பூட்டை உடைத்து நகை திருட்டு உண்டியலையும் மர்மநபர்கள் தூக்கிச் சென்றனர்

சத்தியமங்கலம் பகுதியில் 2 அம்மன் கோவில்களில் பூட்டை உடைத்து நகையை திருடிச்சென்றதோடு உண்டியலையும் மர்மநபர்கள் தூக்கிச்சென்றுள்ளனர்.

Update: 2019-11-23 22:59 GMT
சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே கெம்பநாயக்கன்பாளையத்தில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக பெரியசாமி என்பவர் உள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலை கோவிலில் பூஜையை முடித்தபின் கதவை பூட்டிவிட்டு் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நேற்று காலை பூஜை செய்வதற்காக பூசாரி கோவிலுக்கு வந்து பார்த்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கோவில் முன்பு இருந்த உண்டியலையும் காணவில்லை.

உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த ½பவுன் தாலியையும் காணவில்லை. நேற்று முன்தினம் மாலை கோவிலை பூட்டிவிட்டு் சென்றபிறகு யாரோ மர்மநபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளார்கள்.

பின்னர் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தாலியை திருடியுள்ளனர். அதன்பின்னர் கோவில் முன்பு வைக்கப்பட்டு இருந்த உண்டியலை பெயர்த்து எடுத்து தூக்கிச் சென்றுள்ளது தெரியவந்தது. உண்டியலில் ரூ.1000 இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதேபோல் கெம்பநாயக்கன்பாளையம் அருகே உள்ள கொண்டத்து காளியம்மன் கோவில் கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு் நேற்று காலை திறந்து கிடந்தது. இதை பார்த்த கோவிலுக்கு வந்த பக்தர்கள் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அவர்கள் வந்து பார்த்தபோது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தாலி திருட்டு் போனது தெரியவந்தது. மேலும் சத்தியமங்கலம் அருகே மலையடிபுதூரில் உள்ள புதுமாரியம்மன் கோவில் கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு நேற்று காலை திறந்து கிடந்தது. ஆனால் கோவிலில் நகை எதுவும் இல்லை. வெள்ளி பொருட்கள் மட்டும் இருந்துள்ளது. இதனால் மர்மநபர்கள் ஏமாற்றமடைந்து திரும்பி சென்றுள்ளனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

சத்தியமங்கலம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்களால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்களை பீதியடைய செய்துள்ளது. எனவே சத்தியமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று ெபாதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேபோல் கடந்த வாரம் பவானிசாகர் அருகே துண்டன்சாலை புதூர் அருகே உள்ள குற்றாலத்து மாரியம்மன் கோவிலிலும் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர்.

அந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் தான் இந்த கோவில்களிலும் கைவரிசை காட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்