அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு - ஆணையர் தொடங்கி வைத்தார்
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில் 2 இடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. அவற்றை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன் தொடங்கி வைத்தார்.
அரியாங்குப்பம்,
மழை நீரை சேகரிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும் புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் புதுச்சேரி அரசு உள்ளாட்சி துறை செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர், அரசு கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும் என அறிவுறுத்தினர்.
அதனடிப்படையில் பல்வேறு அரசு அலுவலகங்கள் அரசு பள்ளி கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு நிறுவப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு நிறுவுவதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. தவளக்குப்பத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனையின் ஒத்துழைப்புடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சுமார் ரூ.1 லட்சம் செலவில் இந்த மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் இந்த கட்டிடத்தின் தெற்கு மற்றும் வடக்கு ஆகிய 2 பக்கங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
பணிகள் முடிவடைந்த நிலையில், மழை நீர் சேகரிப்பு திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டது. அதனை அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கொம்யூன் பஞ்சாயத்துகளில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தில்தான் முதல் முறையாக மழைநீர் சேகரிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக ஆணையர் சவுந்திரராஜன் தெரிவித்தார்.