அயர்ந்து தூங்கியது தேசம், அதிகாலையில் நிகழ்ந்தது அரசியல் பூகம்பம்: மராட்டியத்தில் எதிர்பாராத திருப்பம் - பா.ஜனதா அதிரடியாக ஆட்சி அமைத்தது
மராட்டியத்தில் எதிர்பாராத திருப்பமாக, பாரதீய ஜனதா நேற்று காலையில் அதிரடியாக ஆட்சி அமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், சரத்பவாரின் உறவினர் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.
மும்பை,
288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஒரு அணியாகவும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் மற்றொரு அணியாகவும் போட்டியிட்டன.
இந்த தேர்தலில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. பாரதீய ஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்ற இடங்களில் சிறிய கட்சிகளும், சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர்.
பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றியதால் மீண்டும் இருகட்சிகளும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிவசேனா ஆட்சியில் சமபங்கும், முதல்-மந்திரி பதவியும் கேட்க அதை பாரதீய ஜனதா ஏற்க மறுத்ததால், அந்த அணியால் ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது. இதனால் அந்த கூட்டணியும் முறிந்தது.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து சிவசேனா ஆட்சி அமைக்க முயன்றது. ஆனால் கவர்னர் விதித்த ‘கெடு’வுக்குள் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க இயலாததால், கடந்த 12-ந் தேதி மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
அதன்பிறகும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியை சிவசேனா கைவிடவில்லை. இதுதொடர்பாக அந்த கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பச்சைக்கொடி காட்டினார்.
இதையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பாரதீய ஜனதா, ரகசியமாக காய்களை நகர்த்தியது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி, ‘‘கிரிக்கெட்டை போல அரசியலிலும் கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம்’’ என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கிடையே சிவசேனா தலைமையில் ஆட்சி அமைப்பதற்காக குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்பட்டு 3 கட்சிகள் இடையேயான அதிகாரப்பகிர்வு குறித்தும், கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளின் தலைவர்களும் நேற்று முன்தினம் மும்பையில் சந்தித்து பேசி கூட்டணியை இறுதி செய்தனர். இந்த கூட்டத்துக்கு பின் நிருபர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி அரசை அமைப்போம் என்று கூறினார்.
எனவே சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்றும், மராட்டியத்தின் புதிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவி ஏற்பார் என்பதும் கிட்டத்தட்ட உறுதியானது.
அதுவரை எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்த பாரதீய ஜனதா, நள்ளிரவு நேரத்தில் அதிரடியாக களத்தில் இறங்கியது. இதைத்தொடர்ந்து எதிர்பாராத திருப்பமாக பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் சிலர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சிலரை ரகசியமாக தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது சரத்பவாரின் அண்ணன் மகனும், தேசியவாத காங்கிரஸ் சட்டசபை கட்சி தலைவரான அஜித்பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதுபற்றிய தகவல் அதிகாலை 5 மணி அளவில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று டெல்லி செல்ல இருந்த தனது பயணத்தை அவர் ரத்து செய்தார். அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் விறுவிறுப்பாக அரங்கேறின.
மராட்டியத்தில் பாரதீய ஜனதா தலைமையில் புதிய அரசு பதவி ஏற்க இருப்பது பற்றிய தகவல் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு இருந்த ஜனாதிபதி ஆட்சி அவசர அவசரமாக ரத்து செய்யப்பட்டது. இதுபற்றிய அறிவிப்பு அதிகாலை 5.47 மணிக்கு வெளியானது.
ஒட்டுமொத்த தேசமே அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்க, யாருமே எதிர்பாராத வகையில் இப்படி ஒரு அரசியல் பூகம்பம் மராட்டியத்தில் நிகழ்ந்தது.
ஜனாதிபதி ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டது பற்றிய அறிவிப்பு வெளியானதும் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட சில பாரதீய ஜனதா தலைவர்களும் மற்றும் அஜித்பவாரும், அவரது ஆதரவாளர்கள் சிலரும் மும்பையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு விரைந்தனர். அங்கு பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்த அஜித்பவார், தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து அதற்கான கடிதத்தை அவரிடம் வழங்கினார்.
அதன்பிறகு பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற்றது. முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்-மந்திரியாக அஜித்பவாரும் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
காலை 7.50 மணிக்கு தொடங்கிய பதவி ஏற்பு விழா 20 நிமிடத்தில் முடிந்தது.
மராட்டியத்தில் நிகழ்ந்த இந்த திடீர் அரசியல் மாற்றம் காலை 8 மணிக்கு பின்னர் தான் வெளியுலகுக்கு தெரியவந்தது. தொலைக்காட்சிகளில் பதவி ஏற்பு விழாவை பார்த்த மராட்டிய மாநில மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள மக்களும் ‘‘இது எப்படி நிகழ்ந்தது?’’ என்று அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.
ஆட்சியை பிடிக்க பாரதீய ஜனதா மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கை, சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு பேரிடியாக அமைந்து விட்டது.
வருகிற 30-ந் தேதிக்குள் (சனிக்கிழமை) சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ‘கெடு’ விதித்து உள்ளார்.
துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ள அஜித்பவார் முன்பு காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசின் போதும் துணை முதல்-மந்திரி பதவி வகித்து உள்ளார்.
நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்திலும் இவர் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில்தான் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை முதல்-மந்திரியாக்க முடிவு எடுக்கப்பட்டது. அதுவரை தனது திட்டத்தை ரகசியமாக வைத்திருந்த அஜித்பவார் அதன்பிறகு பாரதீய ஜனதா பக்கம் தாவிவிட்டார்.
மராட்டிய அரசியலில் ஏற்பட்ட இந்த திடீர் திருப்பம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.