பூதப்பாண்டியில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த போதகர் கைது

பூதப்பாண்டியில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த போதகரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-11-23 22:15 GMT
பூதப்பாண்டி,

கன்னியாகுமரி அருகே உள்ள வடக்கு தாமரைகுளம் கல்குளம்பொத்தை வடக்கு காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 39). இவர் பூதப்பாண்டியை அடுத்த செம்பொன்விளை ரட்சனிய சேனை ஆலயத்தில் போதகராக உள்ளார்.

இவருக்கு ரூபிபெல்லா என்ற மனைவியும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவர் கடந்த சில தினங்களாக வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சுரேஷ்குமாரை பல இடங்களில் தேடினர். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

கைது

இந்த நிலையில் சம்பவத்தன்று சுரேஷ்குமார் ரட்சனிய சேனை குடியிருப்புக்கு ஒரு பெண்ணை அழைத்து வந்ததாக தெரிகிறது. இதனால் ரூபிபெல்லா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சுரேஷ்குமாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ்குமார் வெட்டு கத்தியை காட்டி ரூபிபெல்லாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் ரூபிபெல்லா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்