அமித்ஷாவை, டோனியுடன் ஒப்பிட்டு டுவிட்டர் பதிவுகள் ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைப்பார்கள்
மராட்டிய அரசியலில் நடந்த அதிரடி திருப்பத்துக்கு பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா தான் காரணகர்த்தா என கூறப்படுகிறது.
மும்பை,
இந்த நிலையில் அமித்ஷாவை, கிரிக்கெட் வீரர் டோனியுடன் ஒப்பிட்டு இருவரும் மிகச்சிறப்பாக ஆட்டத்தை முடிப்பவர்கள்(பெஸ்ட் பினிசர்) என ஒருவர் டுவிட்டர் பதிவில் கூறியிருந்தார். இந்த பதிவு டிரண்ட் ஆனது.
இதேபோல் மற்றொருவர் அமித்ஷாவின் புகைப் படத்தை பதிவிட்டு, இவர் “கேம் ஆப் திரோன்ஸ்” தொடரின் இயக்குனர் என கூறியிருந்தார். கேம் ஆப் திரோன்ஸ் பல திருப்பங்கள் நிறைந்த பிரபலமான வலைதள தொடர் ஆகும். மராட்டியத்தில் நடந்த கடைசிகட்ட திருப்பங்களை குறிக்கும் வகையில் அவர் இவ்வாறு பதிவிட்டு இருந்தார். இதுவும் பலமுறை பகிரப்பட்டது.
பீகார் மாநில துணை முதல்-மந்திரி சுஷில்குமார் “இந்திய அரசியலில் உண்மையான சாணக்கியர் என்பதை அமித்ஷா மீண்டும் நிரூபித்துள்ளார்'' என பதிவிட்டார்.
இதேபோல் உத்தவ் தாக்கரே குறிப்பிட்ட, பாரதீய ஜனதா “சர்ஜிகல் ஸ்டிரைக்” மற்றும் “மகா கிச்சடி சர்காகர்” என்பதும் டிரண்ட் ஆனது. அரசியல் குழப்பத்துக்கு காரணமாக கருதப்படும் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை பற்றிய கருத்துகளும் அதிக அளவில் பகிரப்பட்டன.