மாநிலங்கள் இல்லாத நிலையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
மாநிலங்கள் இல்லாத நிலையைமத்திய அரசுஉருவாக்கி வருவதாக கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டி உள்ளார்.;
புதுச்சேரி,
இந்திய நிதி கூட்டாட்சியில் உள்ள சவால்கள் தொடர்பான தேசிய கருத்தரங்கம் புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. கருத்தரங்கிற்கு கேரள நிதி மந்திரி தாமஸ் ஐசக் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடக்கவுரையாற்றினார். ஜம்மு-காஷ்மீர் முன்னாள் மந்திரி ஹாசீப் த்ரபு நோக்கவுரையாற்றினார்.
கனிமொழி எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
புதுச்சேரி, டெல்லி யூனியன் பிரதேசங்கள் நிதிக்குழுவில் இதுவரை சேர்க்கப்படவில்லை. இதுதொடர்பாக பிரதமர், உள்துறை மந்திரியை பலமுறை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசங்களை நிதிக் குழுவில் சேர்த்துள்ளனர். கடந்த காலங்களில் புதுச்சேரிக்கு 70 சதவீதம் மத்திய அரசு நிதி கிடைத்து வந்தது. அது படிப்படியாக 26 சதவீதமாக தற்போது குறைக்கப்பட்டு உள்ளது. மற்ற மாநிலங்களுக்கு 42 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குகிறது. அதைக்கூட மத்திய அரசு புதுவைக்கு வழங்கவில்லை.
புதுவையில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதற்கு நிதி தருவதில்லை. 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த ரூ.650 கோடி செலவிட்டோம். அதற்கான நிதியையும் வழங்கவில்லை. இங்கு இயற்கை வளங்களோ, கனிம வளங்களோ எதுவுமில்லை. சுற்றுலா மற்றும் கலால் என வருவாய் வாய்ப்புகளும் குறைவாக உள்ளது. இருப்பினும் புதுவையின் வளர்ச்சி 11.4 சதவீதமாக உள்ளது.
மத்திய அரசின் திட்டங்களை மட்டும் செயல்படுத்த புதுச்சேரியை மாநிலமாக கருதுகிறார்கள். நிதியை கேட்டால் யூனியன் பிரதேசம் என்கிறார்கள். மத்திய அரசு ஒரு புறம் நிதியை தர மறுக்கிறது. மற்றொருபுறம் அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசுக்கு நெருக்கடி தருகிறார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அமைச்சரவையின் முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் விதி உள்ளது. ஆனால் தொடர்ந்து அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:-
நிதி விவகாரத்தில் பல முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. அதேபோல் ஒரேநாடு, ஒரே வரி, ஒரே மொழி என அனைத்திலும் ஒன்று என்ற நிலை சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது. 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளால் தமிழகம், கேரள மாநிலங்கள் அதிக பாதிப்படையும். மாநிலத்தில் சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் என்பதே தி.மு.க.வின் நிலை.
மத்திய அரசானது சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வருவாயை எடுத்துக் கொண்டு மாநிலத்திற்கு நிதியை ஒதுக்குவதில்லை. மக்களவை உறுப்பினர்களுக்கான நிதியை வழங்கவில்லை. மாநிலங்களின் உரிமை, நிதி பறிப்பை தாண்டி மாநிலங்களே இல்லாத நிலையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. அதற்கு ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை கூறலாம். நமது நாட்டில் எப்போதும் எதுவும் நடக்கலாம் என்ற பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.