கோவில்பட்டியில் போலீஸ்காரர் மனைவி தூக்கு போட்டு தற்கொலை போலீஸ் விசாரணை
கோவில்பட்டியில் போலீஸ்காரர் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் போலீஸ்காரர் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ்காரர் மனைவி
கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் பிச்சையா. ஓய்வு பெற்ற ரெயில்வே டிக்கெட் பரிசோதகர். இவருடைய மகள் ராமலட்சுமிக்கும் (வயது 27), அதே பகுதியை சேர்ந்த முத்துராமன் (30) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். முத்துராமன் சென்னையில் போலீசாக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் ராமலட்சுமி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு கோவில்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார். பின்னர் அங்கு குடும்பத்தினருடன் இருந்து விட்டு இரவு அதே பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். இரவு குழந்தைகள் தூங்கிய பின்னர் ராமலட்சுமி வீட்டில் தூக்கு மாட்டி தொங்கினார்.
போலீஸ் விசாரணை
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் ராமலட்சுமியை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து முத்துராமனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ்காரர் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.