மாநில அரசு நிதி நெருக்கடியில் இருந்தபோதிலும்: மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுகிறது - அமைச்சர் கந்தசாமி பேச்சு
மாநில அரசு நிதி நெருக்கடியில் இருந்தபோதிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை இந்த அரசு செய்து கொடுத்து வருகிறது என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.
பாகூர்,
கிருமாம்பாக்கத்தை அடுத்த பனித்திட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் சங்க கூட்டம் மற்றும் மேலாண்மை குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொறுப்பு ஆசிரியர் ஞானவேல் தலைமை தாங்கினார். ஆசிரியை தமயந்தி வரவேற்றார். பனித்திட்டு கிராம பஞ்சாயத்து தலைவர் கோவிந்தராசு, கோவில் சிறப்பு அதிகாரி அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பொறுப்புள்ள பெற்றோர் என்ற தலைப்பில் புதுவை வெற்றித்தமிழர் பேரவை தலைவர் கோவிந்தராசு, ஆசிரியை சிவரஞ்சினி ஆகியோர் கருத்துரையாற்றினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வென்று பரிசு பெற்ற மாணவர்களை பராட்டி சான்றுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆசிரியர்களும் பெற்றோர்களும் முயற்சியினால் மாணவர்களின் எதிர்காலம் சிறந்த முறையில் மாற வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் வேலை செய்த பணத்தை பிள்ளைகளுக்காகவே செலவு செய்து விடுகின்றனர். அப்படி படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்காமல் போனால் பெற்றோர்களின் மனநிலை வேதனை அடைவதை என்னால் உணர முடிகிறது.
மாணவர்கள் தீய பழக்கத்துக்கு ஆளாகாமல் படிப்பு ஒன்றே சிந்தனையாக கொண்டு படிக்க வேண்டும் புதுச்சேரி மாநில மாணவர்கள் அரசு உயர்பதவியில் வந்து மாநில வளர்ச்சிக்கான கோப்புகளை தடையின்றி செயல்படுத்த வரவேண்டும்.
புதுச்சேரி மாநிலத்திலேயே ஏம்பலம் தொகுதி மக்கள் அதிகம் பேர் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்து வருகிறது. ஏம்பலம் தொகுதி மக்கள் என்னை அதிகமாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளனர். அவர்களுக்கு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இருப்பது வேதனையாகவே இருக்கிறது. அரசின் முக்கிய திட்டமான இலவச அரிசி, சக்கரை, பண்டிகை கால சலுகைகள், வேலை வாய்ப்புகள் வழங்க விடாமல் அரசு உயர் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 10 ஆயிரம் பேர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்க போதுமான நிதி இல்லாமல் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம்.
கடந்த காலங்களில் புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு 76 சதவீத நிதி வழங்கி வந்தது ஆனால் தற்பொழுது 26 சதவீதம் மட்டுமே நிதி வழங்குகிறது. மேலும் பொருளாதார நெருக்கடியால் தொழிற்சாலைகளும் குறைந்தே வருகிறது.
இதனால் மாநில அரசின் வருவாய் வெகுவாக குறைந்து விட்டது. நிதி நெருக்கடி இருக்கும் நிலையிலும் மக்களுக்கான தேவையான அடிப்படை வசதிகளை தொடர்ந்து இந்த அரசு செய்து வருகிறது.
பனித்திட்டு பகுதியில் விரைவில் உண்டு உறைவிடப்பள்ளி கொண்டுவர மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மத்திய அரசு 5 இடங்களில் மட்டும் உறைவிட பள்ளி கட்ட உள்ளதாக தெரிவித்து உள்ளனர். புதுவைக்கு ரூ.40 கோடி மானியத்தில் ஒரு பள்ளியை கொண்டு வர மீண்டும் வரும் 20-ந் தேதி மத்திய மந்திரியை சந்திக்க உள்ளேன்.
மேலும் பனித்திட்டு நரம்பை கிராமத்திற்கு இடையேயான கிழக்கு கடற்கரை சாலை அமைக்கும் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன் பனித்திட்டு பகுதியில் சுற்றுலா தலம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.
முடிவில் ஆசிரியர் குருநாதன் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
சேதமடைந்த சாலையை சரிசெய்யக்கோரி அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்
நிகழ்ச்சியை முடித்தக்கொண்டு வெளியே வந்த அமைச்சர் கந்தசாமியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிமறித்து முற்றுகையிட்டனர். பனித்திட்டு பகுதியில் புதைவட மின்சார வயர்கள் அமைக்க கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சாலையோரத்தில் பள்ளம் தோண்டினார்கள். அதனால் சாலை சேதமடைந்தது. சேதமடைந்த அந்த சாலையை இதுவரை சரி செய்யவில்லை. அதன் காரணமாக விபத்துகள் நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் நடந்துகூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி நோய் கொசு உற்பத்தியாகி நோய்களை பரப்புகிறது என குற்றம் சார்ட்டினர். மேலும் சேதமடைந்த சாலையை ஒரு வாரத்துக்குள் சரி செய்யவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் எனவும் கூறினார்கள். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.