ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராகுல்காந்திமன்னிப்பு கேட்கவலியுறுத்தி புதுச்சேரியில் பாரதீயஜனதா கட்சியினர்ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2019-11-17 00:01 GMT
புதுச்சேரி,

ரபேல் போர் விமானவழக்கு தொடர்பாக பிரதமர்மீது அவதூறு பரப்பிய ராகுல்காந்தி மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்கவேண்டும்என்று பாரதீயஜனதா கட்சி வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ராகுல்காந்திமன்னிப்பு கேட்கவலியுறுத்தி புதுச்சேரியிலும்நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்குபாரதீயஜனதா கட்சியின் புதுவைமாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார்.

மாநில பொதுச்செயலாளர்கள்தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் ஏம்பலம் செல்வம்,முதலியார்பேட்டை செல்வம், துரை.கணேசன்,மாநில செயலாளர்கள்நாகராஜ், முருகன், ஜெயந்தி, சாய்சரவணன், லட்சுமி,தேசியக்குழுஉறுப்பினர் இளங்கோ, மாநில நிர்வாகிகள் ரத்தினவேலு, அசோக்பாபு, அகிலன்,புகழேந்தி, கோபி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்