சேலத்தில் வெவ்வேறு இடங்களில் விஷம் குடித்து 2 பேர் தற்கொலை
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் விஷம் குடித்து 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம்,
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் விஷம் குடித்து 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
டிரைவர் தற்கொலை
சேலம் அருகே உள்ள வீராணம் வாயக்காடு பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 45). டிராக்டர் டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் சம்பவத்தன்று கோபால் மதுவில் விஷத்தை கலந்து குடித்தார்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி கோபால் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகராறு
சேலம் குகை பஞ்சந்தாங்கி ஏரி வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (28). இவருடைய மனைவி சரண்யா. ரவிச்சந்திரனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதில் கோபித்துக்கொண்டு சரண்யா ஓமலூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் மதுவுடன், விஷத்தை கலந்து ரவிச்சந்திரன் குடித்து விட்டார். இதையடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் வெவ்வேறு இடங்களில் விஷம் குடித்து 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.