திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் நிறுவனத்திற்கு ‘சீல்’

திருப்பூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் நிறுவனத்திற்கு உணவு பாதுபாப்புத்துறை அதிகாரிகள் ‘சீ்ல்’ வைத்தனர்.

Update: 2019-11-15 22:30 GMT
அனுப்பர்பாளையம், 

திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் உரிய அனுமதியின்றி ஒரு தனியார் குடிநீர் நிறுவனம் செயல்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று மதியம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் தங்கவேல், சதீஸ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று அதிரடியாக ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த நிறுவனம் உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. மேலும் வெவ்ேவறு நிறுவனங்களின் லேபிள்களுடன் 20 லிட்டர் கேன்களில் குடிநீர் பிடித்து உணவு பயன்பாட்டிற்காக விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து உடனடியாக அந்த நிறுவனத்திற்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் அங்கு வெவ்வேறு லேபிள்களுடன் இருந்த 20 லிட்டர் தண்ணீர் கேன்கள் 23 பறிமுதல் செய்யப்பட்டது. உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்