கஞ்சா விற்பது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்த வாலிபருக்கு பிளேடால் வெட்டு 3 பேருக்கு வலைவீச்சு

கஞ்சா விற்பது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்த வாலிபருக்கு பிளேடால் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-11-14 22:15 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள கொண்டஞ்சேரி கண்டிகையை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் அரவிந்தன்(வயது 26). இந்தநிலையில் கொண்டஞ்சேரி பகுதியில் கஞ்சா விற்பதாக அரவிந்தன் மப்பேடு போலீசாருக்கு தொலைபேசி மூலம் புகார் செய்தார்.

இதைஅறிந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர்களான குப்பம்கண்டிகை காலனியை சேர்ந்த நரேஷ், திருப்பாச்சூரை சேர்ந்த அருண் ஆகியோரும் ஏன் போலீசில் புகார் செய்தாய்? என்று கூறி செல்போனில் மிரட்டியுள்ளனர்.

பிளேடால் வெட்டு

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலை சுரேஷ் தனது மோட்டார் சைக்கிளில் பேரம்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர் கொண்டஞ்சேரி சாலையில் வந்து கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த சுரேஷ், நரேஷ், அருண் ஆகியோர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அரவிந்தனை தகாத வார்த்தையால் பேசி அடித்து உதைத்து பிளேடால் உடலில் ஆங்காங்கே வெட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து அரவிந்தன் மப்பேடு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுரேஷ், நரேஷ், அருண் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்