மானபங்கம் செய்ய முயற்சித்து வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை வாலிபர் கைது

மானபங்கம் செய்ய முயற்சித்து வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-11-13 22:25 GMT
தானே,

மானபங்கம் செய்ய முயற்சித்து வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பிணமாக மீட்பு

தானேயை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது19). இவரது தாய் நேற்று வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் ஐஸ்வர்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் மாலை பணி முடிந்து தாய் வீட்டிற்கு திரும்பியபோது, ஐஸ்வர்யா வீட்டில் மூச்சுப்பேச்சின்றி பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியில் உறைந்த தாய், கதறி அழுதார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஐஸ்வர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாலிபர் கைது

மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் டோம்பிவிலியை சேர்ந்த தீபக்(29) என்ற வாலிபர் அவரின் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர் தான் ஐஸ்வர்யாவை கொலை செய்தது தெரியவந்தது. காலை நேரத்தில் அங்கு வந்த தீபக், வீட்டில் ஐஸ்வர்யா மட்டும் தனிமையில் இருப்பதை அறிந்துகொண்டு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். மேலும் அவரை மானபங்கம் செய்ய முயன்றதாகவும் தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா சத்தம் போட்டார். இது தீபக்கிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே இளம்பெண்ணை ஈவு இறக்கமின்றி கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து தீபக்கை போலீசார் கைது செய்து விசாரணை வருகின்றனர்.

மேலும் செய்திகள்