தஞ்சை அருகே மினிபஸ் மோதி மூதாட்டி பலி : வங்கிக்கு சென்ற போது பரிதாபம்

தஞ்சை அருகே வங்கிக்கு சென்ற போது மினிபஸ் மோதி மூதாட்டி இறந்தார்.;

Update: 2019-11-13 21:45 GMT
கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசெல்வி(வயது60). இவர் வயதான தனது தந்தை அடைக்கலசாமியுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று மதியம் ஆரோக்கியசெல்வி தஞ்சை கள்ளப்பெரம்பூர் சாலை மேலவெளியில் உள்ள வங்கியில் இருந்து முதியோர் உதவித்தொகை பெற வடக்கு வாசலில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். மேலவெளியில் உள்ள வங்கி சாலையில் அவர் சென்ற போது தஞ்சையில் இருந்து ரெட்டிப்பாளையம் நோக்கி வந்த மினி பஸ் ஆரோக்கியசெல்வி மீது மோதியது.

இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆரோக்கியசெல்வி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மினிபஸ் மோதி மூதாட்டி ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்