திருவள்ளூர் அருகே முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரை தாக்கியவர் கைது

திருவள்ளூர் அருகே முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2019-11-13 22:45 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் துரை (வயது 70). அ.தி.மு.க. பிரமுகரான இவர் நுங்கம்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இந்த நிலையில் கம்மவார்பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி (45) என்பவர் துரையை அணுகி தனக்கு தமிழக அரசு வழங்கும் 3 சென்ட் நிலத்தை பெற்று தருமாறு கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து அவரும் நிலம் வாங்க வழிமுறைகளை எடுத்துக்கூறி தெய்வசிகாமணிக்கு அது சம்பந்தமான மனுக்களையும் எடுத்து கொடுத்துள்ளார்.

இருப்பினும் அவருக்கு அரசால் நிலம் எதுவும் வழங்கப்படவில்லை.

தாக்குதல்

இதனால் ஆத்திரம் அடைந்த தெய்வசிகாமணி கம்மவார்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த துரையை வழிமறித்து தனக்கு ஏன் அரசு வழங்கும் 3 சென்ட் நிலத்தை வாங்கி தர தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தகாத வார்த்தையால் பேசி உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார்.

இதில் காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து துரை மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் தெய்வசிகாமணியை கைது செய்து இது தொடர்பாக மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்