வானவில் : எல்.ஜி.யின் ‘ஜி பேட் 5’ டேப்லெட்

மின்னணு பொருட்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. நிறுவனம் 10.1 அங்குல அளவிலான டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2019-11-13 11:08 GMT
‘ஜி பேட்5’ என்ற பெயரில் இது வந்துள்ளது. வை-பை மற்றும் 4 ஜி வோல்டேயில் இது செயல்படும். இது 10 அங்குல திரையைக் கொண்டது.

இதன் மேல் பகுதி உலோகத்தால் ஆனது. இதில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 821 பிராசஸர் உள்ளது. இதில் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவக வசதி உள்ளது. இதை 512 ஜி.பி. வரை எஸ்.டி. கார்டு மூலம் விரிவாக்கம் செய்யலாம்.

இதன் பக்கவாட்டில் விரல் ரேகை பதிவு சென்சார் உள்ளது. இதன் பின்பகுதியில் 8 மெகா பிக்ஸெல் ஆட்டோ போகஸ் கேமரா மற்றும் முன்பகுதியில் 5 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. டியூயல் பேண்ட் வை-பை, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 3.5 மி.மீ. ஹெட்போன் உள்ளது. கண்ணுக்கு உறுத்தல் தராத வகையில் நீல நிற விளக்கொளிக்கு இதை மாற்ற முடியும். நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 8,200 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதன் விலை சுமார் ரூ.26,900 ஆகும்.

மேலும் செய்திகள்