கூட்டுறவு வார விழாவையொட்டி மாணவ–மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டி எஸ்.ஏ.அசோகன் தொடங்கி வைத்தார்
கூட்டுறவு வார விழாவையொட்டி மாணவ–மாணவிகளுக்கு நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளை ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்,
அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நாளை தொடங்கி 20–ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டிகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கும் பேச்சு, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதே போல் கூட்டுறவு துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கும் பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளுக்கு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தயாபதி நளதம் வரவேற்றார்.
குமரி மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன் போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுப்பையா, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (நாகர்கோவில் சரகம்) சங்கரன், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் பாலசுப்பிரமணியன், அ.தி.மு.க. நகர செயலாளர் சந்துரு, சுகுமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேச்சு, கட்டுரை போட்டி
இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவ–மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் பேச்சு போட்டியானது 6 முதல் 8–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை“ என்ற தலைப்பிலும், 9 மற்றும் 10–ம் வகுப்பு மாணவர்களுக்கு “நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவின் பங்கு“ என்ற தலைப்பிலும், பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 மாணவர்களுக்கு “புதிய இந்தியாவில் கூட்டுறவின் பங்கு“ என்ற தலைப்பிலும் நடைபெற்றது.
இதே போல் 6 முதல் 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு “கிராமப்புற மகளிர் முன்னேற்றத்தில் கூட்டுறவின் பங்கு“ என்ற தலைப்பிலும், 9 மற்றும் 10–ம் வகுப்பு மாணவர்களுக்கு “கூட்டுறவுகளில் புதிய தொழில் நுட்ப சேவைகள்“ என்ற தலைப்பிலும், பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 மாணவர்களுக்கு “கூட்டுறவின் வாயிலாக அரசின் புதிய முயற்சிகள்“ என்ற தலைப்பிலும் கட்டுரை போட்டி நடந்தது.
பரிசு
மேலும் கூட்டுறவுதுறை அலுவலர்களுக்கு “கூட்டுறவுகளில் அதிகாரம் பரவலாக்கல்“ என்ற தலைப்பில் பேச்சு போட்டியும், “வருங்கால கூட்டுறவு வளர்ச்சிக்கு துறை அலுவலர்களின் பங்களிப்பு“ என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் நடத்தப்பட்டது. அதோடு கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு “கூட்டுறவு நிறுவனங்களும் பொருளாதார மேம்பாடும்“ என்ற தலைப்பில் பேச்சு போட்டியும், “சமூக பொருளாதார மேம்பாட்டில் கூட்டுறவின் தாக்கம்“ என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் நடந்தது.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட உள்ளது.