கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடைபெற்றது.

Update: 2019-11-07 22:30 GMT
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் செந்தில்குமார், செல்வக்குமார், இளையராஜா, ராஜேஷ், கால்நடை ஆய்வாளர் வசந்தா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைபரிசோதனை, அறுவை சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாமில் ஆதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்துசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

மேலும் செய்திகள்