பாலக்காடு அருகே, சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் மடிக்கணினியை கேரள போலீசார் ஆய்வு
பாலக்காடு அருகே சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் மடிக்கணினியை கேரள போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஆயுதப்பயிற்சி மற்றும் சதித்திட்டங்கள் பற்றிய ரகசிய தகவல்கள் இருந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை,
தமிழக-கேரள எல்லைப்பகுதியான அட்டப்பாடி மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த 28-ந்தேதி கேரள தண்டர்போல்ட் அதிரடிப்படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் மாவோயிஸ்டுகள் சேலம் பகுதியை சேர்ந்த மணிவாசகம், புதுக்கோட்டையை சேர்ந்த கார்த்திக், கர்நாடகாவை சேர்ந்த சுரேஷ் மற்றும் ஒரு பெண் ஆகிய 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கி சண்டையில் சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த தீபக் சந்து உள்பட 3 பேர் தப்பிஓடிவிட்டனர். அவர்கள் பதுங்கி உள்ளனரா? என்று கேரள போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இதுதவிர தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகமாநில போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் இருந்து மடிக்கணினி, பென்டிரைவ், செல்போன்கள், ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. மடிக்கணினியை போலீசார் ஆய்வு செய்த போது அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் மற்றும் வீடியோ படங்கள் இடம் பெற்று இருந்தன.
கேரள மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ படங்கள் இடம்பெற்று இருந்தன.
சத்தீஷ்கர் மாநிலமாவோயிஸ்டு கும்பலை சேர்ந்த தீபக், கமாண்டோ பயிற்சி பெற்ற தலைவன் ஆவார். 2016-ம் ஆண்டு முதல் கேரள வனப்பகுதியில் பதுங்கி இருந்து மற்றவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து வந்து உள்ளார். மேலும் இவரது தலைமையில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் அடங்கிய தென் இந்தியா பகுதியில் மாவோயிஸ்டுகளின் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது, அரசுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்துவது போன்ற சதித்திட்டங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் தங்களது சதித்திட்டங்களை ரகசிய குறியீடுகள் மூலம் அவர்கள் பரிமாறிக்கொண்டதும் தெரியவந்து உள்ளது.
அரசுக்கு எதிரான சிந்தனை கொண்ட 500 இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்து மாவோயிஸ்டுஇயக்கத்தில் சேர்க்க முயற்சி செய்து வந்ததும்மடிக்கணினி தகவலில்இடம்பெற்றுள்ளது.
மாவோயிஸ்டுகளிடம்இருந்து ஏராளமான துப்பாக்கிகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளநிலையில், மேலும் ஆயுதங்களைவனப்பகுதிக்குள்புதைத்து வைத்துள்ளனரா? என்றும் கேரளபோலீசார்சோதனை நடத்திவருகிறார்கள்.தென் இந்தியாவில்மாவோயிஸ்டுஇயக்கத்தை வலுப்படுத்த நடைபெற்ற முயற்சி, கேரளதண்டர்போல்ட்அதிரடிப்படைபோலீசாரின்அதிரடி நடவடிக்கை மூலம்கட்டுக்குள்கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்,வனப்பகுதியில்பதுங்கியுள்ளமாவோயிஸ்டுகளைபிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்றுவருவதாகவும்கேரள போலீஸ்அதிகாரிகள் தெரிவித்தனர்.