அரசு பள்ளியில் இடப்பற்றாக்குறை: பெற்றோர்கள் சாலை மறியல்
புதுவை அரசு பள்ளியில் இடப்பற்றாக்குறை காரணமாக மாணவர்களை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ததை கண்டித்து பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி கதிர்காமத்தில் தில்லையாடி வள்ளியம்மை அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடுநிலை பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. இதனால் அந்த பள்ளியில் இடபற்றாக்குறை ஏற்பட்டது.
அதையடுத்து பள்ளி வளாகத்தில் தற்காலிக கட்டிடம் கட்டப்பட்டு அங்கு 6, 7, 8 ஆகிய வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் அந்த தற்காலிக கட்டிடம் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வந்தனர்.
இடமாற்றம்
இதுபற்றி அறிந்தவுடன் புதுவை அரசு பள்ளிக் கல்வித்துறை தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வந்த 6,7,8 ஆகிய வகுப்புகளை நேற்று முதல் இந்திரா நகர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பள்ளியின் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் புதுச்சேரி-வழுதாவூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்தவுடன் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் போலீசாரின் சமாதானத்தை அவர்கள் ஏற்க மறுத்தனர்.
பேச்சு வார்த்தை
மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்றக்கூடாது. தில்லையாடி வள்ளியம்மை பள்ளிக்கு அருகிலேயே உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் அருணாச்சலம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களின் சமாதானத்தை ஏற்று பெற்றோர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.