கன்னியாகுமரி அருகே மாணவனுடன் ஓரினச்சேர்க்கை; தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு

கன்னியாகுமரி அருகே மாணவனுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2019-11-04 23:00 GMT
நாகர்கோவில்,

கன்னியாகுமரி அருகே சந்தையடி இடையன்விளையை சேர்ந்தவர் செபசெல்வின் என்ற ஜெபா (வயது 27), தொழிலாளியான இவர் சமையல் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 14-6-2015 அன்று 5-ம் வகுப்பு படிக்கும் மாணவனை செபசெல்வின்தனது வீட்டுக்கு அழைத்து சென்று, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவன் கத்தி கூச்சலிட்டான்.

அவனது சத்தம் கேட்டு, அவனுடைய தாயார் அங்கு ஓடி வந்து மகனை மீட்டார். இதுபற்றி கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செபசெல்வினை கைது செய்தனர்.

5 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி (பொறுப்பு) நம்பி விசாரணை நடத்தி வந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட செபசெல்வினுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி நம்பி உத்தரவிட்டார். மேலும் அவருக்கு 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் நடராஜமூர்த்தி ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்