வாரணவாசியில் தீ விபத்தில் 2 குடிசைகள் எரிந்து நாசம் 6 பேர் காயம்
வாரணவாசியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குடிசைகள் தீயில் எரிந்து நாசமாயின. இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாரணவாசி காலனி தெருவை சேர்ந்தவர் மணிவேல் மனைவி பூபதி (வயது 47). இவரது தாய் ராசாத்தி, மகன்கள் மணிகண்டன், மணிமாறன், வேலுச்சாமி மற்றும் மகள் பூங்கொடி உள்பட 2 பேரக்குழந்தைகளோடு அருகருகே இருந்த 2 குடிசைகளில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் தாய் ராசாத்தியின் குடிசையின் அருகே சென்று கொண்டிருந்த மின்சார கம்பியில் இருந்து தீப்பொறி ஏற்பட்டு குடிசை தீப்பற்ற தொடங்கியது. இதை துணி துவைத்துக் கொண்டிருந்த பூபதி பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டுக்கொண்டே குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த அவரது பேர குழந்தைகளை தூக்கிக்கொண்டு வெளியே ஓடினார். பின்னர் அவரது கூச்சல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் அரியலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு தீயை அணைக்க முயன்றனர்.
6 பேர் காயம்
சிறிதுநேரத்தில் தீ வேகமாக பரவவே அந்த குடிசையில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் தீயின் தாக்கம் அதிகரித்து அருகில் இருந்த குடிசையும் தீப்பற்றி எரிய தொடங்கியது. கியாஸ் சிலிண்டர் வெடிக்கும்போது அருகில் தீயை அணைத்துக் கொண்டிருந்த 6 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது.
பின்னர் அடுத்த சிறிது நேரங்களில் அரியலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 2 குடிசைகளிலும் இருந்த ரூ.10 ஆயிரம், பத்திரங்கள், சான்றிதழ்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், துணிமணிகள் என அனைத்தும் எரிந்து நாசமாயின. அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்த யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை.
ஆறுதல்
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் மற்றும் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும் பாதிக்கப்பட்ட 2 குடும்பத்தினருக்கும் அரசு சார்பில் தலா ரூ.5 ஆயிரம், வேட்டி- சேலை, அரிசி ஆகியவை வழங்கப்பட்டது. அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் 2 குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 ஆயிரம், 2 மூட்டை அரிசி, வேட்டி-சேலை உள்ளிட்டவைகளை வழங்கினார். மேலும் மாவட்ட கலெக்டர் ரத்னா பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் கூடிய விரைவில் அரசு சார்பில் வீடுகள் கட்டித் தரப்படும் என தெரிவித்து சென்றார். அப்போது அ.தி.மு.க. திருமானூர் ஒன்றிய செயலாளர் குமரவேல், தாசில்தார் கதிரவன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் திருப்பதி உள்பட பலர் உடனிருந்தனர்.