புயல் பாதுகாப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுறுத்தல்

புயல் பாதுகாப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2019-10-30 23:00 GMT
வாய்மேடு,

நாகை மாவட்டம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்எச்சரிக்கை பணிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பருவமழை காலங்களில் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவாமல் முன்எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் வீடு, வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு சுகாதாரத்துறை களப்பணியாளர்களிடம் அறிவுறுத்தினர்.தொடர்ந்து, தலைஞாயிறு பழையாற்றங்கரை, வண்டல்-அவரிக்காடு சாலை ஆகிய இடங்களில் வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:-

புயல் பாதுகாப்பு மையங்கள்

மழைநீர் தேங்கும் பகுதிகளில் இருந்து நீரை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களை தங்க வைக்கும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், பள்ளிகட்டிடங்கள், கல்லூரிகள், சமுதாயக்கூடங்கள் ஆகியவற்றில் தற்காலிக முகாம்கள் அமைக்க வேண்டும். வடிகால்களை தூர்வார வேண்டும். பள்ளிக் கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், சத்துணவு மையங்களின் உறுதித்தன்மையை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது உதவி இயக்குனர்(பேரூராட்சிகள்) குற்றாலிங்கம், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் கண்ணப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், வேதாரண்யம் தாசில்தார் சண்முகம், தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி, கூட்டுறவு சங்கதலைவர்அவை. பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்