மத்திகிரியில் துணிகரம்: தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு
மத்திகிரியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 30 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மத்திகிரி,
ஓசூர் அருகே உள்ள மத்திகிரி அபிராமி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் பெங்களூருவுக்கு சென்று இருந்தார். இதனிடையே நேற்று காலை அவர் மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து பிரேம்குமார் மத்திகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த துணிகர சம்பவம் குறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மத்திகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.