சீர்காழி அருகே விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி கார் மோதியது

சீர்காழி அருகே கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலியானார்.

Update: 2019-10-29 22:15 GMT
சீர்காழி,

நாகை மாவட்டம், சீர்காழி அருகே கதிராமங்கலம் கிராமம் மந்தைவெளி தெருவை சேர்ந்தவர் சிற்றரசன் (வயது 48). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் சிற்றரசன் மோட்டார் சைக்கிளில் வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கதிராமங்கலம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு வளைவில் சென்றபோது மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

தொழிலாளி பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிற்றரசன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிற்றரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி சென்றது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன சிற்றரசனுக்கு வெண்ணிலா என்ற மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்