மயிலாடுதுறை வள்ளலார் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
மயிலாடுதுறை வள்ளலார் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை,
குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு நேற்று அதிகாலை 3.49 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வள்ளலார் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. விழாவையொட்டி வதாண்யேஸ்வரர், ஞானாம்பிகை ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
இந்த கோவிலில் குருபகவானாக அருள்பாலிக்கும் மேதா தட்சிணாமூர்த்திக்கு 21 வகையான வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்து ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தங்க கவச அலங்காரம்
அதிகாலை 3.49 மணிக்கு குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்த நேரத்தில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த மேதா தட்சிணாமூர்த்தி சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு சாமி வழிபாடு செய்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை சிவபுரம் வேதசிவாகம பாடசாலை முதல்வர் சாமிநாதன் சிவாச்சாரியார், மணிகண்ட குருக்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் செய்து இருந்தனர்.