வாஷிங்மெசினை இயக்கிய பெண் பரிதாப சாவு: மின்சாரம் தாக்கியது
கோபி அருகே வாஷிங்மெசினை இயக்கியபோது மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.;
கடத்தூர்,
கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன். கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி ராதிகா (வயது 37). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராதிகா நேற்று காலை வீ்ட்டில் வாஷிங்மெசி்னில் துணி துவைப்பதற்காக ஒயரை பிளக்கில் சொருகினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராதிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதை பார்த்த சரவணன் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராதிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ராதிகாவின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.