3 நாட்களில் 1,100 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளன - திருவள்ளூர் ஆட்சியர் மகேஷ்வரி

திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாட்களில் 1,100 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளன என்று அம்மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-29 08:46 GMT
திருவள்ளூர்,

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த, குழந்தை சுஜித் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தது.  

பொது மக்கள் அஞ்சலிக்கு பின்னர், சுஜித் உடல், பாத்திமாபுதூர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. குழந்தை சுஜித் மறைவு அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் தள்ளியுள்ளது. 

இந்நிலையில், குழந்தை சுஜித் மறைவு எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாட்களில் 1,100 ஆழ்துளைக்கிணறுகள் மூடப்பட்டுள்ளதாகவும், புதிதாக ஆழ்துளைக்கிணறுகள் அமைக்க எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற வேண்டும் எனவும்,  மூடப்படாத ஆழ்துளைக்கிணறுகள் பற்றி 9444317862 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தரலாம் என அம்மாவட்ட ஆட்சியர்  மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்