தீபாவளி பட்டாசு வெடித்த போது 4 இடங்களில் தீவிபத்து
மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்த தீப்பொறியால் 3 குடிசைகள் உள்பட 4 தீவிபத்துகள் நடந்துள்ளன.
ராமநாதபுரம்,
மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகை மற்றும் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சி ஆகியவற்றிற்காக தீயணைப்பு நிலையம் 24 மணி நேர பணியில் விழிப்புடன் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள 11 தீயணைப்பு நிலையங்களிலும் நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு படையினர் அனைத்து பணியாளர்களுடன் முழுநேர பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் தீபாவளி அன்று ராமேசுவரம் பகுதியில் பட்டாசு வெடித்து அதனால் ஏற்பட்ட தீப்பொறியால் 3 குடிசை வீடுகளில் தீப்பற்றியது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறை யினர் விரைந்து சென்று உடனடியாக தீயை அணைத்தனர். குடிசை வீடுகளின் ஒருபகுதியில் மட்டும் லேசாக தீப்பற்றிய நிலையில் உடனடியாக தீ அணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல சாயல்குடி பகுதியில் பட்டாசு வெடித்து தீப்பொறியால் ஆட்டுத்தொழுவம் தீப்பற்றியது. உடனடியாக தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதுதவிர மாவட்டத்தில் வேறு எந்த பகுதியிலும் தீபாவளி பட்டாசு தீவிபத்துகள் எதுவும் நடைபெறவில்லை என்று மாவட்ட தீயணைப்பு அலுவலர் சாமிராஜ் தெரிவித்தார்.