சாதி அரசியலில் ஈடுபடவில்லை என்பதை நிரூபிக்க விவாதத்துக்கு தயார் பா.ஜனதாவுக்கு சித்தராமையா பதிலடி
சாதி அரசியலில் ஈடுபடவில்லை என்பதை நிரூபிக்க எந்த விதமான விவாதத்திற்கும் தயாராக இருப்பதாக பா.ஜனதாவுக்கு சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார்.;
பெங்களூரு,
எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையாவும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெங்கடேசும் பேசிக் கொள்ளும் வீடியோ தனியார் கன்னட தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. அந்த வீடியோவில், ‘லிங்காயத் சமுதாயம் எடியூரப்பாவுக்கு ஆதரவாக இல்லை, குமாரசாமிக்கு ஆதரவாக ஒக்கலிக சமுதாயத்தினர் இல்லை, மக்கள் சாதியை பார்த்து வாக்களிப்பதில்லை, டி.கே.சிவக்குமாரும், குமாரசாமியும் கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பின்பும் நட்புடன் இருக்கிறார்கள், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் கொடியை பிடித்து கொண்டு டி.கே.சிவக்குமார் திரிகிறார்,‘ என்று சித்தராமையா பேசி இருந்தார்.
இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து சித்தராமையா சாதி அரசியலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு கூறி பா.ஜனதா டுவிட்டரில் பதிவிட்டு இருந்தது. இந்த நிலையில், பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சித்தராமையா நேற்று தனது டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது வீட்டில் தனிப்பட்ட முறையில் பேசும் வீடியோவை வைத்து, என் மீது பா.ஜனதாவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். இது எனக்கு புதிதல்ல. இதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். நான் சாதியவாதி அல்ல. சமுதாயத்தில் நீதிக்காக போராடிய காந்தி, அம்பேத்கர், பசவண்ணர் மற்றும் குவெம்பு ஆகியோர் கூறிய அறிவுரைபடி செயல்படுபவன். அவர்கள் கூறிய அறிவுரைகளின் படியே ஆட்சி நடத்தினேன். பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தினேன். இது நான் கடைபிடித்த வழி. உங்களது வழி என்ன?. நான் சாதி அரசியலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு கூறும் நீங்கள், உங்களது கட்சியின் கொள்கை, காந்தி, அம்பேத்கர், பசவண்ணர் கூறியபடி நடந்து கொள்கிறீர்களா?
நான் சாதி அரசியலில் ஈடுபடவில்லை. ஈடுபடவும் மாட்டேன். அதுகுறித்து எந்த விதமான விவாதத்திற்கும் தயார். அதுபோல, உங்கள் கட்சியும் கொள்கை, காந்தி, அம்பேத்கர், பசவண்ணர் கூறியபடி நடந்து கொள்கிறதா என விவாதிக்க தயாரா?. மாநில வாக்காளர்கள் சாதியை விட்டுவிட்டு வேறு விதமாக யோசிக்கிறார்கள். எடியூரப்பாவுக்கு ஆதரவாக லிங்காயத் சமுதாயமும், குமாரசாமிக்கு ஆதரவாக ஒக்கலிக சமுதாயமும் இல்லை என்று எனது ஆதரவாளர்கள் கூறியதற்கு, நான் உண்மை தான் என்று சொன்னேன். மக்கள் சாதியவாதியாக இல்லை என்று கூறியதில் என்ன தவறு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.