மகா பிரத்தியங்கரா தேவி கோவிலில் மிளகாய் சண்டியாகம்
அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூர் கிராமத்தில் உள்ள மகா பிரத்தியங்கரா தேவி கோவிலில் அமாவாசையையொட்டி மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது.
தாமரைக்குளம்,
அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூர் கிராமத்தில் உள்ள மகா பிரத்தியங்கரா தேவி கோவிலில் அமாவாசையையொட்டி மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது. இதையொட்டி மகா பிரத்தியங்கராதேவிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது. இதில் மா, பலா, வாழை உள்பட பல்வேறு வகையான பழங்கள், நவ தானியங்கள் மற்றும் பல மூட்டை மிளகாய்கள் ஆகியவை கொட்டப்பட்டது. மிளகாய்கள் கொட்டும்போது, அப்பகுதியில் எந்த விதமான கார நெடியும் ஏற்படவில்லை. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.