தூக்குப்போட்டு பஸ் கண்டக்டர் தற்கொலை
சத்தியமங்கலம் அருகே பஸ் கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் அருகே உள்ள உத்தண்டியூர் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி (வயது 30). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி மைதிலி (வயது 28). இவர் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் பிரசவத்துக்காக அவர் அன்னூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதனால் வீராசாமி மட்டும் தனியாக இருந்துள்ளார். மேலும் அவர் ஏற்கனவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு் வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வெகுநேரமாக வீராசாமியின் அறையின் கதவு பூட்டி கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய தந்தை கதவை தட்டி பார்த்தார். ஆனால் திறக்கவில்லை.
இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு வீராசாமி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வீராசாமி இறந்தார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.