பூதப்பாண்டியில் மின்சாரம் பாய்ந்து 2 வயது குழந்தை சாவு
பூதப்பாண்டியில் மின்சாரம் பாய்ந்து 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
பூதப்பாண்டி,
பூதப்பாண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30), தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி. இவர்களுக்கு ஒரு மகளும், அஸ்வந்த் கார்த்திக் (2) என்ற மகனும் இருந்தனர்.
சதீஷ்குமார் வீட்டின் வளாகத்தில் தரையில் குடிநீர் தொட்டி அமைத்துள்ளார். அந்த தொட்டியில் இருந்து மின் மோட்டார் மூலம் வீட்டின் மேல் பகுதியில் உள்ள மற்றொரு தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படுவது வழக்கம்.
மின்சாரம் பாய்ந்தது
இந்தநிலையில் மதியம் வீட்டில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அஸ்வந்த் கார்த்திக் வீட்டு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது. உடனே, வீட்டில் இருந்த அனைவரும் ஓடி சென்று பார்த்தபோது, அஸ்வந்த் கார்த்திக்மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு அசைவற்ற நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குடிநீர் ஏற்றுவதற்காக ஓடிக் கொண்டிருந்த மோட்டாரின் வயரை இழுத்ததில் குழந்தை மீது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. உடனே, குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அஸ்வந்த் கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வீட்டு வளாகத்தில் விளையாடியபோது, மின்சாரம் பாய்ந்து 2 வயது குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.