மனநலம் பாதித்த விதவை பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல்

மனநலம் பாதிக்கப்பட்ட விதவை பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து மும்பை செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2019-10-26 22:45 GMT
மும்பை, 

அந்தேரி கிழக்கு பகுதியில் 48 வயது மனநலம் பாதிக்கப்பட்ட விதவை பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த சச்சின் தாஸ் (வயது33) என்ற வாலிபர் அங்கு வந்தார். அவர் வீட்டின் வாசலில் உட்கார்ந்து இருந்த விதவை பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்டார்.

இதையடுத்து விதவை பெண் உள்ளே சென்றார். அவரை பின்தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற வாலிபர் கதவை பூட்டிவிட்டு விதவை பெண்ணை மிரட்டி கற்பழித்தார். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து விதவை பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சச்சின் தாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை மும்பை செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் வழக்கை விசாரித்த கோர்ட்டு, வீட்டில் தனியாக இருந்த விதவை பெண்ணை கற்பழித்த வாலிபர் சச்சின் தாசுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

மேலும் செய்திகள்