இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆசிய பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிடவேண்டும்; விவசாய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை
இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆசிய பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என விவசாய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கூடலூர்,
விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் கூட்டம் கூடலூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் முனியாண்டி முன்னிலை வகித்தார். இளைஞர் அணி தலைவர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் ஆசிய பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்தம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டால் இந்திய விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
எனவே ஆசிய பசிபிக் மண்டல பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திடக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து விவசாய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.செல்வராஜ் கூறியதாவது:-
1991-ம் ஆண்டு உலக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் தேயிலை, குறுமிளகு, கரும்பு, தானியங்கள் உள்ளிட்ட அனைத்து விவசாய உற்பத்தி பொருட்களின் விலை வீழ்ச்சி அடைந்தது. இந்த நிலையில் ஆசிய பசிபிக் மண்டல பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் விவசாயிகள், வணிகர்கள், சிறு தொழில் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். மேலும் தொழிலாளர்கள், இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு நாடுகள் இணைந்து ஆசிய பசிபிக் மண்டல பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த வணிக ஒப்பந்தம் இந்திய உணவு மற்றும் விவசாய துறைக்கு மிகப்பெரிய ஆபத்தாகும்.
வருகிற நவம்பர் மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து விடும் என கூறப்படுகிறது. அப்போது இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டால் விவசாயம் சார்ந்த சந்தை பொருட்கள் பலவற்றின் மீதான இறக்குமதி வரி பூஜ்ஜிய நிலைக்கு வந்து விடும். எனவே இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.