அவினாசி அருகே ஆம்புலன்ஸ்- சரக்கு வாகனம் மோதல்; 2 பேர் பலி
அவினாசி அருகே ஆம்புலன்ஸ்- சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
அவினாசி,
கோவையில் இருந்து சேலம் நோக்கி ஒரு சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வாகனத்தில் கோவை இடையர்பாளையம் காவேரி நகரை சேர்ந்த அஜீத் (வயது 20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கார்க்கி (21) ஆகியோர் இருந்தனர். இந்த சரக்கு வாகனம் அவினாசியை அடுத்த மொண்டிநாதம்பாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சேலத்தில் இருந்து கோவை நோக்கி ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆம்புலன்சை சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த சுரேஷ்குமார் (39) என்பவர் ஓட்டினார். டிரைவரின் இருக்கை அருகே ஆட்டையாம்பட்டியை சேர்ந்த முரளி (29) என்பவர் அமர்ந்து இருந்தார். இந்த நிலையில் கண் இமைக்கும் நேரத்தில் சரக்கு வாகனம் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத்தடுப்பை தாண்டி எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சரக்கு வாகனத்தின் முன்பகுதி மற்றும் ஆம்புலன்சின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.
இதற்கிடையில் ஆம்புலன்சுக்கு பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் கருமத்தம்பட்டியை சேர்ந்த கார்த்தி (28), மாதவன் (30) மற்றும் நரேந்திரன் (29) ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய ஆம்புலன்சின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் இருந்த அஜீத் மற்றும் கார்க்கி ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
ஆம்புலன்சை ஓட்டிச்சென்ற சுரேஷ்குமார், ஆம்புலன்சில் இருந்த முரளி மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற கார்த்தி, மாதவன், நரேந்திரன் ஆகிய 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் உள்ளவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஜீத் மற்றும் கார்க்கி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.