தாட்கோ மூலம் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஆனந்த் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் தொழில் கடன் பெற விண்ணபிக்கலாம் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-10-26 22:45 GMT
திருவாரூர்,

தாட்கோ மூலம் இந்து ஆதிதிராவிட மக்களுக்காக செயல்படுத்தப்படும் கீழ்கண்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள்் வரவேற்கப்படுகின்றது. இதற்கான வயது வரம்பு 18 முதல் 65 வரையிலும், குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சம் ஆகும். அதன்படி மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டம் மற்றும் நிலம் மேம்பாட்டு திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், கிணறு அமைத்தல், தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றிக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது.

தாட்கோ இணையதள முகவரி

மேலும் பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முடநீக்குமையம், ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல், மேம்படுத்துதல், சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி மானியம் திட்ட தொகையில் 50 சதவீதம், சட்ட பட்டதாரிகளுக்கு நிதி உதவி, தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி-1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதி உதவி போன்ற பல்வேறு கடன் உதவிகள் வழங்கபடுகிறது.

தாட்கோ இணையதள முகவரி “ http://application.tahdco.com ” மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும,் விண்ணப்பங்களை திருவாரூர் மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் ரூ.60-ஐ செலுத்தி விண்ணப்பங்களை பதிவு செய்யும் வசதியும் ஏற் படுத்தப்பட்டுள்ளது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆதி திராவிட இனத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பித்து மேற்குறிப்பிட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மூலம் பயனடைந்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்